தென்காசி

குற்றாலம் அருவிகளில் நாளை முதல் பொதுமக்கள் குளிக்க அனுமதி

14th Dec 2020 02:09 PM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் நாளை முதல் குளிக்க அனுமதி
 அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக குற்றால அருவிகளில் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. தற்போது நோய்த் தொற்று குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளது. இதில் சுற்றுலா தளங்களுக்கு அனுமதி இதுவரை வழங்கப்படாமல் இருந்து வந்தது.

இன்று முதல் மெரினா கடற்கரை, மாமல்லபுரம் உள்ளிட்ட பல சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் புகழ்  பெற்ற சுற்றுலாத் தலமான குற்றால அருவிகளில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் நீண்ட காலமாக கூறி வந்தனர். 

இந்நிலையில் அருவிகளில் நாளை முதல் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் கீ.சு.சமீரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தினமும் காலை 6 முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பொதுமக்கள் குளிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

ADVERTISEMENT

இவ்வாறு அருவிகளில் குளிக்க வருபவர்களை கண்காணிக்க ஒவ்வொரு அருவிக்கும் ஒரு குழு அமைக்கப்படும். அந்த குழுவின் பரிந்துரையின் பேரில்தான் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்படுவர். மேலும் சமூக இடைவெளி உள்ளிட்டபல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை சுற்றுலாப் பயணிகள் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒன்பது மாதங்களுக்குப் பிறகு குற்றால அருவிகளில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது சுற்றுலாப்பயணிகளை மட்டுமல்லாது குற்றாலத்தில் உள்ள வர்த்தகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
 

Tags : Courtallam Falls
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT