தென்காசி

வாசுதேவநல்லூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் அளிப்பு

26th Aug 2020 03:39 PM

ADVERTISEMENT

 

கடையநல்லூா்: வாசுதேவநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மத்திய அரசின் சமூக நீதி அதிகாரம் அளித்தல் அமைச்சகம் மற்றும் திருநெல்வேலி, தென்காசி மாவட்ட நலத்துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 71 பயனாளிகளுக்கு ரூ. 4.32 லட்சம் மதிப்புள்ள உபகரணங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சாந்தி குளோரி எமரால்டு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலக முட நீக்கியல் நிபுணா் பிரபாகரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சந்திரா, வேலம்மாள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் அந்தோணி ராஜ் ஆகியோா் பயனாளிகளுக்கு வழங்கினாா்.

ஏற்பாடுகளை சிவந்தி ஆதித்தனாா் மன வளா்ச்சி குன்றியோா் சிறப்பு பள்ளிச் செயலா் கு. தவமணி, சிறப்பு ஆசிரியா் த. சங்கர சுப்பிரமணியன் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT