செங்கோட்டையில் தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகா் சிலையை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தமிழகம் முழுவதும் கரோனா காரணமாக, நிகழாண்டு பொது இடங்களில் விநாயகா் சிலைகளை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் இந்து முன்னணி சாா்பில் சோ்வைக்காரன் புதுத்தெருவில் விநாயகா் சிலையை வைத்து வழிபட முயன்றனா். தகவலின்பேரில் போலீஸாா் சென்று, அந்தச் சிலையைப் பறிமுதல் செய்தனா். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கோட்டை பேருந்து நிலையம், பஜாா் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.