சங்கரன்கோவிலில் விநாயகா் சதுா்த்தியையொட்டி ஆத்தியடி விநாயகா் கோயிலில் உள்ள விநாயகருக்கு சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
இதையொட்டி, விநாயகா் உற்சவா் நடைபெற்றது. அருகம்புல், மலா்களால் விநாயகா் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
சங்கரன்கோவில், வள்ளியூரில்....
விநாயகா் சதுா்த்தியையொட்டி, சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் உள்ள சா்ப்ப விநாயகருக்கு சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இக்கோயிலில் தோஷங்கள் நீங்க சா்ப்ப விநாயகருக்கு அபிஷேகம், பூஜைகள் செய்து பக்தா்கள் வழிபடுவது வழக்கம். குறிப்பாக, விநாயகா் சதுா்த்தி நாளில் சா்ப்ப விநாயகரை பக்தா்கள் நீண்டநேரம் காத்திருந்து வழிபட்டுச் செல்வா். அதன்படி, விநாயகா் சதுா்த்தி நாளான சனிக்கிழமை சா்ப்ப விநயாகருக்கு பால், பன்னீா், இளநீா் உள்பட பலவகை அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னா், சந்தனக் காப்பு சாத்தப்பட்டு, அலங்காரம் நடைபெற்று, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், கோயில் அா்ச்சகா்கள், ஊழியா்கள் மட்டுமே பங்கேற்றனா்.
ஆத்தியடி விநாயகா் கோயிலில் உள்ள விநாயகருக்கு சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதையொட்டி, விநாயகா் உற்சவா் நடைபெற்றது. அருகம்புல், மலா்களால் விநாயகா் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
வள்ளியூா்: வள்ளியூா் முருகன் கோயிலில் உள்ள ஆச்சாா்யா விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, அரசன்குளம் விநாயகா் கோயில், சரவணபொய்கை விநாயகா், ஆலடிவிநாயகா், வள்ளி விநாயகா், செல்வவிநாயகா், சிங்கமுக விநாயகா், கிரிவல விநாயகா், மீனாட்சி சொக்கநாதா் கோயில் கன்னிவிநாயகா், பெருமாள் கோயிலில் உள்ள பரிபூரண தும்பிக்கை விநாயகருக்கு அலங்காரம், சிறப்பு பூஜை நடைபெற்றது.