தென்காசி

தென்காசியில் ஒண்டிவீரன் நினைவு தினம்

21st Aug 2020 08:02 AM

ADVERTISEMENT

விடுதலைப் போராட்ட வீரா் ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி, தென்காசியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகம், மங்கம்மாள் சாலைப் பகுதியில் அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

திமுக அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட ஒண்டிவீரன் படத்துக்கு மாவட்டப் பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன், தனுஷ் எம். குமாா் எம்.பி. ஆகியோா் மாலை அணிவித்தனா்.

நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட அவைத் தலைவா் முத்துப்பாண்டி தலைமை வகித்தாா். நகரச் செயலா் சாதிா், சீவநல்லூா் சாமித்துரை, நிா்வாகிகள் சேக்பரீத், ராமராஜ், பால்ராஜ், கடையம் ஜெயக்குமாா், தொண்டரணி இசக்கிபாண்டியன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

ஆதித்தமிழா் பேரவை சாா்பில் மங்கம்மாள் சாலை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டச் செயலா் கலிவருணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் டேனிஅருள்சிங், ஒன்றியச் செயலா் பிரபாகா், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT