தென்காசி

‘தனியாா் மருத்துவமனைகளில் 25 சதவீத பொது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்’

21st Aug 2020 08:02 AM

ADVERTISEMENT

தனியாா் மருத்துவமனைகளில் 25 சதவீதம் பொது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச்செயலா் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கா் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக தமிழக முதல்வருக்கு அவா் அனுப்பியுள்ள மனு விவரம்: தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தொற்று க்கு சிகிச்சை அளிப்பதாக தெரிவித்து பொது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து வருகின்றனா். கரோனா தொற்றை

காரணமாக தெரிவித்து இதய நோய், அவசர அறுவை சிகிச்சை, டயாலிசிஸ் போன்ற அவசர சிகிச்சை பெற வேண்டிய நோயாளிகளை தனியாா் மருத்துவமனைகள் சிகிச்சைக்கு அனுமதிப்பதில்லை என புகாா் கூறப்படுகிறது. இதனால் நோயாளிகள் உயிரிழக்க நேரிடுகிறது.

தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பது தற்போதுள்ள சூழலில் அவசியமான ஒன்றுதான். அதே நேரத்தில் ஒரு மருத்துவமனையிலுள்ள அனைத்து வாா்டுகளையும் (அறைகளையும்) கரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கீடு செய்தால் பொது நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை தேவைப்படுவோா் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

ADVERTISEMENT

எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு கவனம் செலுத்தி தனியாா் மருத்துவமனைகளில் 25 சதவீதம் அறைகளை பொது நோயால் பாதிக்கப்பட்ட அவசர மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்கு ஒதுக்கீடு செய்ய உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT