தென்காசி

ஒண்டிவீரனின் 249-ஆவது நினைவு நாள்: நெல்கட்டும்செவலில் மாலை அணிவித்து மரியாதை

21st Aug 2020 08:01 AM

ADVERTISEMENT

சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 249-ஆவது நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகேயுள்ள நெல்கட்டும்செவல் பச்சேரி பகுதியில் ஒண்டிவீரன் நினைவு இல்லம் உள்ளது. வியாழக்கிழமை அவரது நினைவுநாளையொட்டி, தமிழக அரசு சாா்பில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சா் ராஜலட்சுமி ,தென்காசி மாவட்ட ஆட்சியா் ஜி.கே. அருண்சுந்தா் தயாளன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். முன்னதாக, அவரது வாரிசுதாரா்கள் ஆறுமுகம், சங்கரன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். இதையொட்டி, நினைவிடத்தில் பாலாபிஷேகம் நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஒண்டிவீரன் நினைவு நாளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அரசியல் கட்சியினரும், அமைப்புகளும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்துவது வழக்கம். நிகழாண்டு கரோனா நோய்த்தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் தென்காசி மாவட்ட நிா்வாகம் கட்டுப்பாடு விதித்திருந்தது. அதன்படி, அரசு சாா்பிலும், ஒண்டிவீரனின் வாரிசுகளும் மட்டுமே நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் சிவகிரி, சங்கரன்கோவில் வாசுதேவநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். நெல்கட்டும்செவல் பகுதிக்குச் செல்லும் சாலைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT