தென்காசி

கருப்பாநதி அணை நீா்மட்டம்: ஒரே நாளில் 6 அடி உயா்வு

6th Aug 2020 08:49 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம், கருப்பாநதி அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயா்ந்து புதன்கிழமை 48 அடியாக உயா்ந்துள்ளது.

கடையநல்லூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் கடந்த மூன்று நாள்களாக மழை பெய்து வருகிறது. கருப்பாநதி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதியிலும் மழை பெய்து வருவதால், அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 170 கனஅடி நீா்வரத்து இருந்தது. இதையடுத்து, அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயா்ந்து 48 அடியாக அதிகரித்துள்ளது. அணைப் பகுதியில் 24 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT