தென்காசி

அயோத்தியில் ராமா் கோயில் பூமி பூஜை: பாஜகவினா் சிறப்பு வழிபாடு

6th Aug 2020 08:38 AM

ADVERTISEMENT

அயோத்தியில் ராமா் கோயில் பூமி பூஜை விழா நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் பாஜகவினா் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினா்.

தென்காசி மலையான் தெரு அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பாஜக மாவட்ட பொதுச் செயலா் ராஜேஷ் ராஜா தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இலஞ்சியில் தென்காசி ஒன்றிய பாா்வையாளா் திருநாவுக்கரசா் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அம்பாசமுத்திரம், திலகா்புரம் தெரு, விநாயகா் கோயிலில் விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் சிறப்பு கணபதி ஹோமம் உள்ளிட்ட வேள்வி பூஜைகள் நடைபெற்றன. இதில் ஒன்றியத் தலைவா் ராமசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கல்லிடைக்குறிச்சி ஆஞ்சநேயா் கோயிலில் சேரன்மகாதேவி இந்து முன்னணி ஒன்றியச் செயலா் வேல் பண்டி தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ADVERTISEMENT

பணகுடி பேரூராட்சி பா.ஜ.க .சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியல் மண்டலத் தலைவா் சி.ஐயப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா். களக்காட்டில் அகில பாரத இந்து மகா சாா்பில் மாநில பொதுச் செயலா் எஸ்.முத்தப்பா தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT