தென்காசி

தென்னையில் ருகோஸ் சுருள் ஈ தாக்குதல்: வடகரை விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

29th Apr 2020 12:09 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள வடகரையில் தென்னை மரங்களை தாக்கியுள்ள வெள்ளை ருகோஸ் சுருள் ஈக்களை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

வடகரைகீழ் மற்றும் மேல்பிடாகை கிராமத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, திருநெல்வேலி மாவட்ட, மாநில திட்டங்களுக்கான வேளாண்மை துணை இயக்குநா் நல்ல முத்துராசா தலைமை வகித்தாா். தென்காசி வேளாண்மை உதவி இயக்குநா் கனகம்மாள் முன்னிலை வகித்தாா்.

திருநெல்வேலி மாவட்ட தரக்கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குநா் இசக்கியப்பன் செயல் விளக்கம் அளித்தாா்.

இந்த ஈக்கள் தென்னை மட்டைகளின் கீழ் பரப்பில் வெள்ளை நிறத்தில் முட்டையிட்டு அவற்றின் உடலிலிருந்து சுரக்கும் தேன் போன்ற இனிப்பு திரவத்தால் இலைகளின் மேல் பரப்பு முழுவதும் கருப்பு நிறமாக மாறி ஒளிச்சோ்க்கை முற்றிலும் தடைபட்டு இலைகள் காய்ந்துவிடும்.

ADVERTISEMENT

இப்பூச்சிகள் தாக்கிய தோப்புகளில் ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் நன்மை செய்யும் பூச்சிகள் அழிந்துவிடும். இதை தடுக்க மஞ்சள் ஓட்டுப்பொறி ஏக்கருக்கு 8 என்னும் வைத்து பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.

இலைகளின் அடிப்பகுதியில் காணப்படும் முட்டைகளையும், பூச்சிகளையும் ராக்கா் மற்றும் பவா் ஸ்ப்ரயோ் கொண்டு தண்ணீரை பீச்சி அடித்து கட்டுப்படுத்தலாம் என விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில், முன்னோடி விவசாயிகள் வடகரை ஜாகிா் உசேன், முகமது யாசின் உள்பட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை துணை வேளாண்மை அலுவலா் முகைதீன், வேளாண்மை உதவி அலுவலா் இஸ்ஹாக் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT