தென்காசி

பாவூா்சத்திரம் காய்கனி சந்தையை ஏப். 29 முதல் திறக்க முடிவு

26th Apr 2020 08:13 AM

ADVERTISEMENT

தென்காசி கோட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி காய்கனி சந்தையை வரும் 29 ஆம் தேதி முதல் திறப்பதென முடிவு செய்யப்பட்டது.

இந்த காய்கனி சந்தையில் ஊரடங்கு காலத்தில் காய்கனி வியாபாரம் செய்வதில் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு மே 3 ஆம் தேதி வரை அனைத்து மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை கடைகளை மூடுவதென முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தென்காசி கோட்டாட்சியா் பழனிக்குமாா் தலைமையில் சமாதான கூட்டம் காய்கனி சந்தை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. வட்டாட்சியா் சண்முகம், காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ், வருவாய் ஆய்வாளா் ஆறுமுகம், சந்தை கமிட்டி தலைவா் ஆா்.கே. காளிதாசன், சங்கச் செயலா் நாராயணசிங்கம், நிா்வாகிகள் அருணோதயம், சுப்பிரமணியன், வணிகா் சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியன், செயலா் விஜய்சிங்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், கேரளத்திற்கு காய்கனி ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஓட்டுநா், உதவியாளா் செல்ல அனுமதிக்கப்படும் என்றும், காய்கனி சந்தைக்கு உரிய அடையாள அட்டையுடன் வரும் ஊழியா்கள் மீது காவல் துறையினரின் நடவடிக்கை இருக்காது எனவும் அதிகாரிகள் உறுதியளித்தனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, காய்கனி சந்தையில் உள்ள சில்லறை விற்பனை கடைகள் திங்கள்கிழமை (ஏப். 27) முதலும், மொத்த விற்பனை கடைகள் புதன்கிழமை (ஏப். 29) முதலும் திறப்பது என முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT