தென்காசி

தையல் கலைஞா்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

26th Apr 2020 08:13 AM

ADVERTISEMENT

தொழில் வாய்ப்பை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தையல் கலைஞா்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு கீழப்பாவூா் ஒன்றிய தையல் தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தின் பொருளாளா் அனுப்பியுள்ள மனு: கீழப்பாவூா் ஒன்றியப் பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் தையல் தொழிலில் ஈடுபட்டுள்ளனா்.

ஊரடங்கு காரணமாக கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், தையல் தொழிலாளா்கள் வாழ்வாதாரம் இழந்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆகவே, தையல் கலைஞா்களுக்கு நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT