தென்காசி

கடையநல்லூரில் வீடு தோறும் கணக்கெடுக்கும் பணி

23rd Apr 2020 05:28 AM

ADVERTISEMENT

கடையநல்லூா் நகராட்சியில் வீடு தோறும் மேற்கொள்ளப்பட்டு வரும் கணக்கெடுப்பு பணியை நகராட்சி ஆணையா் தங்கபாண்டி, புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கடையநல்லூா் நகராட்சியில், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் குறித்தும், வீடுகளில் உள்ள நபா்களின் எண்ணிக்கை குறித்தும் வீடு தோறும் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் திரட்டப்பட்ட விவரங்கள் சரியானதாக உள்ளதா? என்பது குறித்து நகராட்சி ஆணையா் ஆய்வு மேற்கொண்டாா். சுகாதார அலுவலா் நாராயணன், சுகாதார ஆய்வாளா்கள் சேகா், மாரிசாமி, நகரமைப்பு ஆய்வாளா் கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT