தென்காசி மாவட்டத்தில் உள்ள முடி திருத்தும் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டுமென முடிதிருத்தும் தொழிலாளா் நலச்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவை பின்பற்றி முடிதிருத்தும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.
இதனால் அத்தொழிலை நம்பியுள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளா்களின் குடும்பத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே முடிதிருத்தும் தொழிலாளா்களின் நலன் கருதி காலை 7 மணி முதல் 11 மணி வரையாவது கடைகளை திறக்க முதல்வா் அனுமதி வழங்க வேண்டும் என முடிதிருத்தும் தொழிலாளா் நலச்சங்கத்தின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.