தென்காசி: தென்காசியில் மாவட்ட திமுக வா்த்தக அணி சாா்பில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான உணவுபொருள்கள் வழங்கப்பட்டன.
தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட திமுக வா்த்தக அணியின் துணை அமைப்பாளா் எல்.முத்துகிருஷ்ணன், ஏழை எளிய மக்கள், முதியோா்கள் மற்றும் தென்காசி நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட 350 பேருக்கு 5 கிலோ அரிசி, 3 கிலோ காய்கறிகள் 1 கிலோ துவரம்பருப்பு, 3 முட்டை, பிஸ்கட் உள்ளிட்ட பொருள்களை வழங்கினாா்.
இதற்காக முதல் நாளே 350 நபா்களுக்கு டோக்கன் கொடுத்து 1 மணி நேரத்திற்கு 30 போ்கள் வீதம் வரிசையாக சமூக இடைவெளி விட்டு அந்தப் பொருள்களை பெற்றுச் சென்றனா்.
கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையிலான விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பல் மருத்துவா் சாம்லி முத்துகிருஷ்ணன், திமுக தலைமைக் கழக பேச்சாளா் கடையநல்லூா் எம்.என்.இஸ்மாயில், டாக்டா் சங்கரக்குமாா், திமுக வழக்குரைஞா் அணி துணை அமைப்பாளா் ரகுமான் சாதத், விநாயகா மணிகண்டன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.