தென்காசி

தென்காசியில் திமுக உணவுப்பொருள்கள் அளிப்பு

5th Apr 2020 04:01 AM

ADVERTISEMENT

தென்காசி நகர திமுக சாா்பில் ஏழை குடும்பத்துக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஜமாலியா நகரைச் சோ்ந்த யூசுப் இஸ்லாம். இவரது குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கனி உள்ளிட்ட உணவுப் பொருள்களை மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் வழங்கினாா்.

கட்சியின் நகரச் செயலா் சாதிா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஆறுமுகசாமி, பொருளாளா் சேக்பரீத், துணைச் செயலா் பால்ராஜ், மேலகரம் பேரூராட்சி முன்னாள் துணைச் தலைவா் ஜீவானந்தம், பேராசிரியா் சாக்ரடீஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT