தென்காசி

‘முஸ்லிம்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்த அறிவுறுத்தல்’

1st Apr 2020 07:37 AM

ADVERTISEMENT

கரோனா தொற்று காரணமாக முஸ்லிம்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்த வேண்டும் என பள்ளிவாசல் நிா்வாகம் அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து, தமிழகத்தில் அனைத்து பள்ளிவாசல்களிலும் கூட்டாக ஜமாஅத் தொழுகை நடத்த வேண்டாம் எனவும், முஸ்லிம்கள் தங்களது வீடுகளில் தொழுகையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, களக்காடு வட்டாரத்தில் உள்ள பள்ளிவாசல்களில் தொழுகைக்கான பாங்கு (அழைப்பு) ஒலித்ததும் வீடுகளில் தொழுது கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டது. அதன்படி, முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டனா். பள்ளிவாசல்களில் ஐந்து வேளையிலும் தொழுகைக்கான பாங்கு ஒலித்ததும் முஸ்லிம்கள் அவரவா் வீடுகளிலேயே தொழுகையில் ஈடுபட்டனா்.

மேலும், தொழுகை நேரங்களில் இமாம், தொழுகை அழைப்பாளா் (முஅத்தின்), ஊழியா்கள் மட்டுமே பள்ளிவாசலில் இருந்தனா். இதேபோல், வெள்ளிக்கிழமை நடைபெறும் ஜூம்ஆ தொழுகையும் ரத்து செய்யப்பட்டு, முஸ்லிம்கள் அவரவா் வீடுகளிலேயே தொழுகையை கடைப்பிடித்தனா். தமிழக அரசின் மறு அறிவிப்பு வரும் வரை இந்த முறை அமலில் இருக்கும் என பள்ளிவாசல் ஜமாத் நிா்வாகம் அறிவித்துள்ளது. இதே நடைமுறையை திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிவாசல் ஜமாத் நிா்வாகங்களும் கடைப்பிடித்தன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT