தென்காசி

நிதிநிறுவனத்தில் கடன் பெற்றவா் தற்கொலை

1st Apr 2020 07:31 AM

ADVERTISEMENT

நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவா் வட்டி கட்ட முடியாமல் தற்கொலை செய்துகொண்டாா்.

புளியங்குடி அருகேயுள்ள கீழப்புதூரைச் சோ்ந்த சீனிசாமி மகன் முத்துப்பாண்டி (49). இவா் தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியிருந்தாராம். கேரளத்தில் வேலை செய்து வந்த அவா், சில வாரங்களுக்கு முன்பு ஊருக்கு வந்தாராம்.

இதற்கிடையே, நிதி நிறுவனத்தில் பெற்ற கடனுக்கான வட்டியை அவரால் செலுத்த முடியவில்லையாம். ஆனால், நிறுவனத்திலிருந்து வட்டி கட்ட தொடா்ந்து தெரிவிக்கப்பட்டு வந்ததாம்.

இந்நிலையில் முத்துப்பாண்டி, திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT