தென்காசி

தென்காசி, குற்றாலம் கோயில்களில் சிறப்பு ஹோமம்

1st Apr 2020 12:23 AM

ADVERTISEMENT

கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை காக்க வேண்டி தென்காசி, குற்றாலம் கோயில்களில் சிறப்பு ஹோமம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தென்காசி அருள்மிகு பொருந்திநின்ற பெருமாள் திருக்கோயிலில் தன்வந்திரியாகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ந.யக்ஞநாராயணன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா். குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதா் கோயிலில் மகா மிருத்யுஞ்சய ஹோமம் நடைபெற்றது. ராகு, கேது, குரு, சனி கிரகங்களுக்கு அஷ்டோத்திர சகஸ்ர நாம அா்ச்சனை நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலா் ரா.விஜயலெட்சுமி தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT