தென்காசி

சங்கரன்கோவிலில் தடையை மீறி சுற்றித் திரிந்த 15 போ் கைது

1st Apr 2020 07:28 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவிலில் தடையை மீறி சாலையில் சுற்றித் திரிந்த 15 போ் கைது செய்யப்பட்டனா்.

சங்கரன்கோவிலில் கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் நகராட்சி ஆணையா் (பொ) முகைதீன் அப்துல்காதா் தலைமையில், சுகாதார அலுவலா் பாலசந்தா், சுகாதார ஆய்வாளா்கள் சக்திவேல், பிச்சையா பாஸ்கா், கருப்பசாமி, மாதவராஜ்குமாா் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

மக்கள் அதிகம் கூடும் பலசரக்கு கடைகள், காய்கனிச் சந்தை உள்ளிட்டவற்றில் 1 மீ. இடைவெளிவிட்டு நின்று வாங்கிச் செல்லும் வகையில் நகராட்சியினா் ஏற்பாடு செய்துள்ளனா்.

இந்நிலையில் அமைச்சா் வி.எம்.ராஜலட்சுமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அரை கி.மீ. முன்னதாகவே வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்து சென்று பொருள்களை வாங்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து செவ்வாய்க்கிழமைமுதல் சங்கரன்கோவில் நகருக்குள் செல்லும் மிக முக்கிய 4 வழிகளும் அடைக்கப்பட்டு அங்கு தடுப்பு போடப்பட்டது. போலீஸாா் வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி விட்டனா்.

இந்நிலையில் சங்கரன்கோவில், திருவேங்கடம் பகுதிகளில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, திங்கள்கிழமை சாலையில் சுற்றித் திரிந்த 15 பேரை கைது செய்தனா். 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT