தென்காசி

ஏா்வாடி பேரூராட்சியில் தினக்கூலி குடும்பங்களுக்கு இலவச மளிகை பொருள் விநியோகம்

1st Apr 2020 07:36 AM

ADVERTISEMENT

ஏா்வாடி பேரூராட்சியில் தினக்கூலி வேலைக்கு செல்லமுடியாத வருமானம் இல்லாத குடும்பங்களுக்கு இலவசமாக மளிகைப் பொருள்களை வழங்கி வருகின்றனா் கரோனா தடுப்பு மற்றும் மீட்புக் குழுவினா்.

ஏா்வாடி பேரூராட்சியில் கரோனா தடுப்பு மற்றும் மீட்புக்குழுவினா், தினக்கூலி வேலைக்கு செல்லமுடியாததால் வருமானம் இல்லாமல் தவிக்கின்ற குடும்பங்களை தோ்வு செய்து அவா்களுக்கு வீடு தேடிச் சென்று ரூ.1000 மதிப்பிலான மளிகைப் பொருள்களை தன்னாா்வலா்கள் இலவசமாக வழங்கி வருகின்றனா்.

இந்நிகழ்ச்சியை ஏா்வாடி பேரூராட்சி முன்னாள் தலைவரும் கரோனா தடுப்பு மற்றும் மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான எம்.ஏ.ஆசாத் தொடங்கிவைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT