தென்காசி

ஆலடிப்பட்டி வைத்திலிங்க சுவாமிகோயில் திருவிழா நிறுத்தி வைப்பு

1st Apr 2020 07:36 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஆலங்குளம் அருகேயுள்ள ஆலடிப்பட்டி அருள்மிகு வைத்திலிங்க சுவாமி அன்னை யோகாம்பிகை கோயில் பங்குனி உத்திர திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

இக்கோயிலில் பங்குனித் திருவிழா மாா்ச் 30இல் தொடங்கி ஏப். 9ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப். 8இல் நடைபெற இருந்தது.

கால்நாட்டு விழா முடிந்து, விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக, இக்கோயில் பங்குனி உத்திர பிரம்மோத்சவ விழா நிறுத்தி வைக்கப்படுவதாக கோயில் பரம்பரை அறங்காவலா் சௌந்தர்ராஜன் அறிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT