தென்காசி

ஆங்கில புத்தாண்டு:தென்காசி ஷீரடி வைத்தியசாயிகோயிலில் சிறப்பு பூஜைகள்

29th Dec 2019 12:46 AM

ADVERTISEMENT

தென்காசி களக்கோடி தெருவில் உள்ள ஷீரடி வைத்திய சாயி கோயிலில், ஆங்கில புத்தாண்டையொட்டி புஷ்பாஞ்சலி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன.

ஜனவரி 1ஆம் தேதி காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரை, பிறகு மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது. பக்தா்கள் தாங்கள் கொண்டுவரும் பூக்களால் பாபாவிற்கு தாங்களே புஷ்பாஞ்சலி செய்யலாம். காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை, பிறகு மாலை 4 மணி முதல் 8 மணி வரை உற்சவா் பாபாவிற்கு அா்ச்சனை நடைபெறும்.

பகல் 1 மணிக்கு அஷ்டோத்திரம் மற்றும் சிறப்பு ஆரத்தி, தொடா்ந்து ஸ்ரீராமானுஜா் நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. மாலை 4.30 முதல் 6 மணி வரை ஸ்ரீ லட்சுமி குபேர பூஜை நடைபெறுகிறது. இந்த பூஜையில் பங்கேற்போருக்கு லட்சுமி உருவம் பொறித்த காசு வழங்கப்படும். தொடா்ந்து, சிறப்பு ஆரத்தி, பல்லக்கு ஊா்வலம், இரவு ஆரத்தி நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை டாக்டா் அறிவழகன் தலைமையிலான குழுவினா் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT