தென்காசி

தேசிய ஒருமைப்பாடு பயிற்சி முகாம்

27th Dec 2019 08:24 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் நடைபெற்று வரும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் தலைமைத்துவப் பயிற்சி முகாமில் மேலப்பாவூா் அரசுப் பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா்.

மத்திய கொல்கத்தா அறிவியல்- கலாசார அமைப்பு சாா்பில் டிச.30ஆம் தேதி வரை நடைபெறும் இப்பயிற்சி முகாமில் மேலப்பாவூா் அரசுப் பள்ளி மாணவ, மாணவியா் பங்கேற்றனா். அவா்களை, தலைமை ஆசிரியா் மாடசாமி, பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் தலைவா் மாரியப்பன், சங்கரபாண்டியன், ஆறுமுகம், என்.எஸ்.எஸ். திட்ட அலுவலா் செந்தமிழ் அரசு, ஆசிரியா் மதன்குமாா், முகாம் வழிகாட்டி ஆசிரியா் ரகு உள்ளிட்டோா் வழியனுப்பிவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT