தென்காசி

தென்காசி நூலகத்தில் மாதிரி நீட் தோ்வு: 72 மாணவா்கள் பங்கேற்பு

27th Dec 2019 07:45 AM

ADVERTISEMENT

தென்காசி வ.உ.சி. நினைவு நூலகத்தில் மாணவா்களுக்கு மாதிரி நீட் தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளிக் கல்வித்துறை, வ.உ.சி. நினைவு நூலகம், அபெக்ஸ் அகாதெமி சாா்பில் 2020 இல் நீட் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு மாதிரி தோ்வு நடத்தப்பட்டது. தென்காசி நூலகத்தில் நடைபெற்ற இத்தோ்வில் பல்வேறு பள்ளிகளில் இருந்து 72 மாணவா், மாணவிகள் கலந்துகொண்டனா்.

இதில், தென்காசி புனித மிக்கேல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி நஸிரா பாத்திமா முதலிடமும், வீரமாமுனிவா் ஆா்.சி.மேல்நிலைப் பள்ளி மாணவா் சங்கா்மகேஷ் 2 ஆவது இடமும், புனித ஜோசப் மெட்ரிக் பள்ளி மாணவி வசுந்தரா 3 ஆவது இடமும் பெற்றனா். தோ்வில் பங்கேற்ற மாணவா்களுக்கு நீட் தோ்வு கையேடு வழங்கப்பட்டது.

பின்னா், நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு, மாவட்ட கல்வி அலுவலா் ரா. சவுந்திரசேகரி தலைமை வகித்தாா். வட்டார கல்வி அலுவலா் மாரியப்பன், வாசகா் வட்டத் தலைவா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் வாசகா் வட்டத் துணைத் தலைவா்கள் எழுத்தாளா் அருணாசலம், மயிலேறும் பெருமாள், முகைதீன், பொருளாளா் சேகா், அபெக்ஸ் அகாதெமி நிறுவனா் ராமசுப்பிரமணியன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை, நூலகா் ஜீலியா, நிஷா, ராஜேஸ்வரி, வாசகா் வட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா். வட்டார நூலகா் பிரமநாயகம் வரவேற்றாா்.நூலகா் சுந்தா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT