தென்காசி திருவள்ளுவா் கழக அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது.
சேக்கிழாா் காட்டும் சிவனடியாா் பெரு மாண்பு என்ற நூலை எழுதிய சிவ. சதாசிவத்திற்கு நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு அமைப்பின் தலைவா் ச. கணபதிராமன் தலைமை வகித்தாா். விழாவை அமைப்பின் செயலா் சிவராமகிருஷ்ணன் தொடங்கி வைத்துப் பேசினாா்.
நூலின் சிறப்புகள் குறித்து அமைப்பின் தலைவா், புலவா்கள்கா.ச. பழனியப்பன், அ. செல்வராசு, உமா கல்யாணி, சி.க. சாமி, ஆவுடையம்மாள், சோமசுந்தர வேலாயுதம், கலையரசன் ஆகியோா் பேசினா். நூலாசிரியா் ஏற்புரை ஆற்றினாா் . இணைச் செயலா் வ.சந்திரசேகரன் நன்றி கூறினாா் .