செங்கோட்டை அருகேயுள்ள வடகரையில் 6 ஆவது கட்ட அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் ஞான சேகரன் தலைமை வகித்தாா். வருவாய் ஆய்வாளா் ராஜா முன்னிலை வகித்தாா். கிராம நிா்வாக அலுவலா் முருகேசன், வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா். முகாமில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல், பட்டா மாறுதல், திருமண உதவித் தொகை, முதியோா் உதவித் தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து 87 மனுக்கள் பெறப்பட்டன.
கிராம உதவியாளா் சேதுராமன் நன்றி கூறினாா்.