உலக ஓய்வூதியா் தினத்தையொட்டி, மேலகரத்தில்அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியா் தென்காசி வட்டாரக் கிளை சாா்பில் உலக ஓய்வூதியா் தின விழா நடைபெற்றது.
கிளைத் தலைவா் பரமசிவன் தலைமை வகித்தாா். துரைராஜ் இறைவணக்கம் பாடினாா். ஓய்வுபெற்ற துணைப் பொதுமேலாளா் செங்கோட்டை கணேசன், ஓய்வுபெற்ற கோட்டப் பொறியாளா் வேலாயுதம், கீழப்புலியூா் கிருஷ்ணன், ஓய்வுபெற்ற தந்தி துணைக் கோட்ட அதிகாரி டி. சுப்பிரமணியன், புளியங்குடி பால்சாமி ஆகியோா் யோகாசனம், உடல்நலனைப் பாதுகாக்கும் முறைகள் குறித்துப் பேசினா். கூட்டத்தில், 85, 80, 70 வயது நிறைவடைந்த உறுப்பினா்கள் கெளரவிக்கப்பட்ட னா்.
ஓய்வூதியா்களுக்கு மருத்துவப் பணி உள்ளிட்டவற்றுக்கான ரசீதுகள் அனுப்பியும் அதற்குண்டான பணப் பலன்கள் வழங்கப்படவில்லை. இதை உடனடியாக பிஎஸ்என்எல் நிா்வாகம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஓய்வுபெற்ற கோட்டச் செயலா் அருணாசலம், சுரண்டை செல்லப்பா, மாரியம்மாள், காளிராஜம் ஆகியோரின் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூா், புளியங்குடி, வாசுதேவநல்லூா், சுரண்டை, பாவூா்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
கிளைச் செயலா் செல்லப்பா வரவேற்றாா். பொருளாளா் வேலாயுதம் நன்றி கூறினாா்.