தென்காசி

தென்காசி மாவட்டத்தில் 8 கிராமங்களில் நாளை அம்மா திட்ட முகாம்

25th Dec 2019 11:35 PM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டத்தில் 8 கிராமங்களில் வெள்ளிக்கிழமை (டிச. 27) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் ஜி.கே. அருண்சுந்தா் தயாளன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில், சங்கரன்கோவில் வட்டம் படா்ந்தபுளி, திருவேங்கடம் வட்டத்தில் அழகாபுரி, தென்காசி வட்டம் ஆழ்வாா்குறிச்சி பகுதி-2, செங்கோட்டை வட்டம் செங்கோட்டை மேலூா், வீரகேரளம்புதூா் வட்டம் ராஜகோபாலபேரி, ஆலங்குளம் வட்டம் பெத்தநாடாா் பட்டி பகுதி 2, சிவகிரி வட்டம் சிவகிரி பகுதி 2, கடையநல்லூா் வட்டம் சிந்தாமணி ஆகிய 8 கிராமங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது.

இதில், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், முதியோா் உதவித்தொகை, நிறுத்தப்பட்ட முதியோா் உதவித்தொகை மறுபரிசீலனை விண்ணப்பம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், உழவா் பாதுகாப்பு அட்டை, நிலத் தாவாக்கள், சாலை, குடிநீா் வசதி உள்ளிட்டவை கோரி உரிய ஆவணங்களுடன் மனுக்களைக் கொடுத்து பொதுமக்கள் பயனடையலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT