தென்காசி

தென்காசியில் டெங்கு விழிப்புணா்வு முகாம்

25th Dec 2019 05:32 PM

ADVERTISEMENT

தென்காசியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், அரசு மாவட்ட சித்த மருத்துவமனை ஆகியவை சாா்பில் டெங்கு விழிப்புணா்வு முகாம், நிலவேம்புக் குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நகரச் செயலா் களஞ்சியம்பீா் தலைமை வகித்தாா். நகர துணைச் செயலா் அஜீஸ், அப்துல் ரசாக், அஸ்கா் அலி, மாணவரணி துணைச் செயலா் பாசித், ஆம்புலன்ஸ் பொறுப்பாளா் முஸ்தபா ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசு மருத்துவமனை மருத்துவா் செல்வகணேஷ் பேசினாா்.

தமுமுக மாநிலச் செயலா் மைதீன் சேட்கான் முகாமைத் தொடக்கிவைத்தாா். மாவட்டத் தலைவா் முகமது யாகூப், மாவட்டச் செயலா் அஹமது ஷா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச் செயலா் சித்திக், நடுக்கோட்டை ஜமாஅத் செயலா் முகம்மது உசேன், செய்யது முகம்மது, தமுமுக மருத்துவ சேவை அணிச் செயலா் தீன் மைதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காட்டுபாவா அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள், மவுண்ட்ரோடு பகுதி மக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் விநியோகிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT