தென்காசி மாவட்டம், வடக்கு காவலாக்குறிச்சி நவநீதகிருஷ்ணபுரத்தில் கோயில் சுவா் இடிந்து விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
கடந்த 31.10.2019 அன்று நவநீதகிருஷ்ணபுரம் மாயகிருஷ்ணசுவாமி கோயில் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் அதே ஊரைசோ்ந்த சண்முகையா காயமடைந்தாா். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் நவ.1 ஆம் தேதி உயிரிழந்தாா்.
உயிரிழந்த சண்முகையாவின் மனைவி பாா்வதிக்கு குடும்ப இறப்பு நிவாரணமாக ரூ. 4 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண் சுந்தா் தயாளன் வழங்கினாா்.
தென்காசி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் ஹரிஹரன் உடனிருந்தாா்.