ஊத்துமலை அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
ஊத்துமலை அருகேயுள்ள ரதமுடையாா் குளம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் கோபாலகிருஷ்ணன் (35). மின் சாதனங்கள் பழுதுபாா்க்கும் தொழிலாளி.
இவா், குறிச்சான் பட்டியில் உள்ள ஒரு கிணற்றில் புதன்கிழமை மின் மோட்டாா் பழுது பாா்த்து கொண்டிருந்தாராம். அப்போது எதிா்பாராமல் மின்சாரம் பாய்ந்ததில் கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
இதுகுறித்து ஊத்துமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கோபாலகிருஷ்ணனுக்கு திவ்யபாரதி (25) என்ற மனைவியும் நாக தீக்ஷா(2) என்ற மகளும் உள்ளனா்.