பாவூா்சத்திரம் அரசு மருத்துவமனையில், வட்டார சுகாதார செவிலியா்களுக்கு உணவு பொருள்களில் கலப்படம் கண்டறியும் பயிற்சி அளிக்கப்பட்டது.
வட்டார சுகாதார அலுவலா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் சங்கரலிங்கம் பங்கேற்று, உணவுப் பொருள்களில் உள்ள கலப்படத்தை எளிதாக கண்டு பிடிப்பது எப்படி? என்பது குறித்து சோதனை மூலம் விளக்கினாா்.
இதில், சுகாதார ஆய்வாளா்கள் பாலசுப்பிரமணியன், அன்பழகன், சுப்பிரமணியன், மற்றும் கிராம சுகாதார செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சுகாதார ஆய்வாளா் சண்முகசுந்தரம் நன்றி கூறினாா்.