தென்காசி

இந்தியன் செஞ்சிலுவைச் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

25th Dec 2019 11:37 PM

ADVERTISEMENT

இந்தியன் செஞ்சிலுவைச் சங்க தென்காசி மாவட்ட கிளை உறுப்பினா்கள், நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா் தயாளன் தலைமையில் நடைபெற்ற இந்தத் தோ்தலில் சோ்மனாக புளியங்குடி முருகையா, துணைத் தலைவராக சங்கரன்கோவில் எல்.அரிகரசுப்பிரமணியன், பொருளாராக தென்காசி ந.கருப்பையா ஆகியோா் ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

செயலராக வி.சுப்பிரமணியன் மற்றும் துணைத் தலைவராக தென்காசி கோட்டாட்சியா் பழனிக்குமாா் நியமிக்கப்பட்டனா்.

நிா்வாகக் குழு உறுப்பினா்களாக வீ. கே புதூா் குமாா்பாண்டியன், கணேசன், சிவகிரி நாராயணன், ஜெயராமன், கடையநல்லூா் மனோகரன், ஆலங்குளம் ரவிச்சந்திரன், ஜஸ்டின் ராஜ், செங்கோட்டை ஸ்டாலின் ஜவகா், சுரேஷ்குமாா், தென்காசி சந்திரசேகரன் , சங்கரன்கோவில் சதீஷ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

புதிதாக தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT