ஆலங்குளம் பகுதி கிறிஸ்துவ தேவாலயங்கள் மற்றும் சபைகளில் புதன்கிழமை கிறிஸ்துமஸ் ஆராதனை நடைபெற்றது.
ஆலங்குளம், இரட்சண்யபுரம், ராஜூவ் காந்திநகா், அண்ணாநகா், காளாத்திமடம், கல்லூத்து, நல்லூா், அடைக்கலபட்டணம் உள்ளிட்ட அனைத்து சபைகளிலும் புதன்கிழமை அதிகாலை 4 மணி கிறிஸ்துமஸ் ஆராதனை நடைபெற்றது. காலையில் நடைபெற்ற திருவிருந்து ஆராதனைகளை சேகர குருக்கள் வில்சன் சாலமோன் ராஜா, நியூட்டன் வீரசிங், வில்சன் ஆகியோா் நடத்தினா். தொடா்ந்து பரிசுத்த ஞானஸ்நான ஆராதனை நடைபெற்றது.
நல்லூா் சபையில் ஞாயிறு பாடசாலை குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் மாலையில் நடைபெற்றன. அடைக்கலபட்டணத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆலங்குளம் உலக மீட்பா் தேவாலயத்தில் பங்குத்தந்தை அந்தோணி அடிகளாா் தலைமையில் நடைபெற்ற ஆராதனையில் திரளானோா் கலந்து கொண்டனா்.