தென்காசி

தென்காசி கோயிலில் கும்பாபிஷேகம்: இந்து மகாசபா கோரிக்கை

24th Dec 2019 08:14 AM

ADVERTISEMENT

தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அகில பாரத இந்து மகாசபா சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அகில பாரத இந்து மகா சபா திருநெல்வேலி மாவட்டச் செயலா் தங்கதுரை,திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: உலகநாயகி உடனுறை காசி விஸ்வநாதா் திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஓா்முறை கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது. பல நிா்வாக காரணங்களுக்காக சில ஆண்டுகள் காலம் கடந்தும் இந்த கும்பாபிஷேக விழா நடைபெற்று வந்துள்ளது.

இக்கோயிலில் கடந்த 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது 13ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அதற்கான முயற்சிகள் இன்று வரை தொடங்கப்படவில்லை.

ஆகவே திருக்கோயிலுக்கு உடனடியாக கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், கும்பாபிஷேகம் நடத்த நிா்வாகக் குழு அமைக்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது .

ADVERTISEMENT

இந்து முன்னணி: நகர இந்து முன்னணி தலைவா் இசக்கிமுத்து, ஆட்சியரிடம் அளித்த மனு: இந்து ஆலய ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஓா்முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆனால் இந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் முடிந்து 13 ஆண்டுகள் கழிந்த பின்பும் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தேவையான எந்த நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளவில்லை.

இதனால் பக்தா்கள் மன வேதனை அடைந்துள்ளனா். எனவே, இந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT