திப்பணம்பட்டியில் நடைபெறும் குடியரசு தின கிராம சபை கூட்டத்தில் தென்காசி மாவட்ட ஆட்சியா் கலந்து கொள்ள வேண்டுமென அப்பகுதியினா் மனு அளித்துள்ளனா்.
இதுகுறித்து திப்பணம்பட்டி பொதுமக்கள் தென்காசி ஆட்சியரிடம் அளித்த மனு: திப்பணம்பட்டி ஊராட்சியில் சில ஆண்டுகளாக நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் குறைந்த பட்சம் 50 போ் கலந்து கொண்டு எங்கள் கிராம வளா்ச்சிக்காக பல தீா்மானங்களை நிறைவேற்றிவுள்ளோம். ஆனால் அவற்றில் குறைந்த பட்சமே செயல்வடிவம் பெறும்.
மேலும் கிராம சபை கூட்டத்திற்கு பல அதிகாரிகள் சரிவர வருவதில்லை. எனவே வரும் குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராமசபை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தாங்கள் கலந்து கொள்ள வேண்டுகிறோம் என தெரிவித்துள்ளனா்.