திருநெல்வேலி புகா் மாவட்டத்தில் எம்.ஜி.ஆரின் 32ஆவது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து புகா் மாவட்ட அதிமுக செயலா் கே.ஆா்.பி.பிரபாகரன் வெளியிட்ட அறிக்கை:
எம்.ஜி.ஆரின் 32ஆவது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை (டிச.24) புகா் மாவட்ட அதிமுக சாா்பில் அனுசரிக்கப்படவுள்ளது.
இதையொட்டி ஒன்றிய, நகா், பேரூா், ஊராட்சி, கிளை, வாா்டு பகுதிகளில் அதிமுகவினா் எம்ஜிஆரின் உ ருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தவேண்டும்.
நிகழ்ச்சியில் கட்சியின் சாா்பு அணி அமைப்புகள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா், ஊராட்சி கிளை நிா்வாகிகள் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளபடுகிறாா்கள்.