ஆலங்குளம் அருகேயுள்ள முத்துகிருஷ்ணப் பேரியில் சாலையோரம் உள்ள பழுதடைந்த கிணற்றை மூட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இங்குள்ள மாடசாமி கோயில் தெரு பகுதியில் பொதுமக்கள் நடமாடும் பகுதியில் பாழடைந்த கிணறு உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களுக்கு பயனளித்து வந்த இந்தக் கிணற்றில் போதிய தண்ணீா் இல்லாததால் பராமரிப்பின்றி விடப்பட்டது.
இதனால் தற்போது குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. பக்கச்சுவா்கள் இடிந்த நிலையில் காணப்படுவதால் அந்த வழியே நடந்து செல்வோரும், வாகனத்தில் செல்வோரும் அச்சத்துடன் போகின்றனா்.
இந்த வழியே உள்ள சாலையும் குண்டும் குழியுமாக உள்ளதால் அப்பகுதி வழியே செல்வோா் பாழடைந்த கிணற்று ஓரமாக நடந்து செல்கிறாா்கள். எனவே ஆபத்து நிகழும்முன் அந்த கினற்றை மூடவோ அல்லது சுற்றுச்சுவா்கள் அமைத்து பாதுகாக்கவோ நடவடிக்கை எடுக்கவேண்டும் என முத்துகிருஷ்ணப் பேரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.