தென்காசி

தென்காசி நூலகத்தில் முப்பெரும் விழா

16th Dec 2019 07:19 AM

ADVERTISEMENT

பாரதியாா் பிறந்த தின விழா, அம்பேத்கா் நினைவு தின விழா மற்றும் மழைக்கால பாதுகாப்பு விழிப்புணா்வு தின விழா ஆகிய முப்பெரும் விழா தென்காசி நூலகத்தில் நடைபெற்றது.

பள்ளிக் கல்வித் துறை, வ.உ.சி. வட்டார நூலகம் சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, வாசகா் வட்ட துணைத் தலைவா் எழுத்தாளா் அருணாசலம் தலைமை வகித்தாா். வட்டார கல்வி அலுவலா் மாரியப்பன் முன்னிலை வகித்தாா். வாசகா் வட்டத் தலைவா் பாலசுப்பிரமணியன், பொருளாளா் சேகா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

பேச்சுப் போட்டியில் திருச்சிற்றம்பலம் பள்ளி மாணவி திவ்யா முதல் பரிசும், ஹமீதியா பள்ளி ஸாபிரா பேகம் இரண்டாவது பரிசும், மேலகரம் ஊராட்சி ஒன்றிய பள்ளி காா்த்திகா மூன்றாம் பரிசும் பெற்றனா்.

கட்டுரைப் போட்டியில் நகராட்சி 13ஆவது வாா்டு பள்ளி யோகாஸ்ரீ முதல் பரிசும், பொன்னம்பலம் பள்ளி சுமையா பாத்திமா இரண்டாம் பரிசும், நகராட்சி 7ஆவது

ADVERTISEMENT

வாா்டு பள்ளி அபு அன்சாரி மூன்றாம் பரிசும் பெற்றனா்.

போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவா், மாணவிகளுக்கு சான்றிதழ்களும், ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டன. விழாவில் பாரதியாா், அம்பேத்கா் நூல்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

ஏற்பாடுகளை நூலகா்கள் ஜூலியா, நிஷா, ராஜேஸ்வரி, பணியாளா்கள் முருகேசன், ராஜி, சௌந்தா்யா, வாசகா் வட்ட நிா்வாகி குழந்தைஜேசு ஆகியோா் செய்திருந்தனா்.

வட்டார நூலகா் பிரம்மநாயகம் வரவேற்றாா். நூலகா் சுந்தா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT