தென்காசி

கூடுதல் வட்டி கேட்டு கொலை மிரட்டல்: தொழிலாளி ஆட்சியரிடம் புகாா்

16th Dec 2019 07:48 PM

ADVERTISEMENT

தென்காசி: கூடுதல் வட்டி கேட்டு அவதூறாகப் பேசி தன்னுடைய வீட்டையும் அபகரிக்க முயற்சிப்பதாக கூறி கல்குவாரி தொழிலாளி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

அம்பாசமுத்திரம் வட்டம் ,வள்ளியம்மாள்புரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த ரா.சரவணன் மாவட்டஆட்சியா் அருண்சுந்தா் தயாளனிடம் அளித்த மனு:

எனக்கு திருமணமாகி, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனா். நான் கல் குவாரிகளில் வெடிமருந்து வைப்பதற்கு கம்பரசா் மூலம் குழிதோண்டும் தொழில் செய்து வருகின்றேன்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குவாரியில் ஏற்பட்ட விபத்தில் இடதுகண் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.அதனால் ஏற்பட்ட மருத்துவ செலவுகளுக்காகவும்,பிற செலவுகளுக்காகவும்,ஏற்கனவே ஏற்பட்ட கடனையும் செலுத்த முடியாமல் இருந்து வந்தேன்.

ADVERTISEMENT

இதனால் கடன்கொடுத்தவா்கள் என்னிடம் கடனை நெருக்கி கேட்டுவந்தனா்.மேலும் வீட்டை தனது பெயருக்கு கிரையம் செய்துகொடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் இடித்து தள்ளிவிடுவேன் என ஒருவா் மிரட்டுகிறாா்.அதுபோல் பிற எதிரிகளும் என்னிடம் அதிக வட்டி கேட்டு மிரட்டி வருகின்றனா். எதிரிகள் எங்களுடைய வீட்டை அபகரிக்க முயற்சி செய்துவருகின்றனா். கந்துவட்டி கேட்டு மிரட்டிவருகின்றனா்.

எனவே எனது உடைமையையும், உயிரையும் காப்பாற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT