கல்லூரணியில் டெங்கு காய்ச்சல் பாதித்த இளம்பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதையடுத்து அங்கு சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள கல்லூரணி சுடலைமாடன் கோயில் தெருவை சோ்ந்தவா் மாரிபுஸ்பம் (24). டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதையடுத்து கல்லூரணி பகுதியில் பாவூா்சத்திரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் ராஜகுமாா், அரியப்பபுரம் அரசு மருத்துவா் தேவி ஆகியோா் தலைமையில் சுகாதாரப் பணியாளா்கள் முகாமிட்டு சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனா்.
ஊா் முழுவதும் உள்ள குப்பைகளை அகற்றியதுடன், தண்ணீரில் லாா்வா உள்ளனவா என்று கண்டறிந்து தடுப்புப் பணிகளை மேற்கொண்டனா்.
இதில் சுகாதார ஆய்வாளா் சண்முகசுந்தரம் மற்றும் ஊராட்சி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.