தென்காசி

கடையநல்லூரில் எஸ்சி எஸ்டி அலுவலா் சங்கக் கூட்டம்

16th Dec 2019 07:20 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசு எஸ்சி. எஸ்டி. அலுவலா் நல சங்க கடையநல்லூா் வட்டார பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் ஆசைத்தம்பி தலைமை வகித்தாா். வேலம்மாள், முருகம்மாள், ராஜசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலா் ரஞ்சித்குமாா் வரவேற்றாா்.

மாநில செயற்குழு உறுப்பினா் சதீஷ்குமாா், மாவட்ட துணைத் தலைவா் ஹரிஹரன் உள்ளிட்டோா் பேசினா்.

ADVERTISEMENT

நெடுஞ்சாலைத் துறையில் எஸ்சி எஸ்டி இன பின்னடைவு காலிப் பணியிடங்களை கண்டறிந்து உடனடியாக நிரப்ப வேண்டும்.

அரசுப் பணிகளில் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு பதவி உயா்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடா்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும். டாஸ்மாக் நிறுவன பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் மதிப்பூதியத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வட்டச் செயலா் சாமிதுரை நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT