தென்காசி

அரியப்பபுரத்தில் பள்ளி முன்பு கழிவுநீா் தேக்கம்: நோய் பரவும் அபாயம்

16th Dec 2019 07:18 AM

ADVERTISEMENT

அரியப்பபுரத்தில் பள்ளியின் முன்பு தேங்கியுள்ள கழிவு நீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள அரியப்புரத்தில், கடையம் பிரதான சாலையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவா், மாணவிகள் படித்து வருகின்றனா். இப்பள்ளியின் நுழைவு வாயில் அருகில் கழிவுநீா் நீண்ட நாள்களாக தேங்கியுள்ளது.

தற்போது இப்பகுதியில் பரவலமாக மழை பெய்து வருவதாலும், வாருகால் வசதி இல்லாததாலும் தண்ணீா் செல்ல வழியில்லாததாலும் அப் பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, துா்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே பள்ளி முன்பு தேங்கியுள்ள கழிவுநீரை அப்புறப்படுத்துவதுடன், அந்தப் பகுதியில் வாருகால் வசதியும் செய்து தர வேண்டுமென அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT