தென்காசி

அனுமதி இன்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழா் விடுதலை களத்தினா் கைது

16th Dec 2019 07:21 AM

ADVERTISEMENT

சுதந்திரப் போராட்ட வீரா் வெண்ணிகாலாடியின் நினைவு தினத்தை அரசு விழாவாக கொண்டாட வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழா் விடுதலை களத்தினா் 75 போ் கைது செய்யப்பட்டனா்.

பூலித்தேவரின் தலைமை படைத் தளபதியாக விளங்கியவா் வெண்ணிகாலாடி . அவரின் நினைவேந்தல் டிசம்பா் 20ஆம் தேதி ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது . அவரது நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவித்து கொண்டாடுவதுடன், சிலையுடன் கூடிய மணிமண்டபமும் அமைக்க வலியுறுத்தி புளியங்குடியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தமிழா் விடுதலை களம் அறிவித்திருந்தது.

ஆனால் ஆா்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் புளியங்குடி பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ாக மாநிலத் தலைவா் ராஜ்குமாா், துணைத் தலைவா் சாமி ,தென்காசி மாவட்டச் செயலா் சுரேஷ் பாண்டியன், ஒருங்கிணைப்பாளா்கள் சேகா், முத்துப்பாண்டி, ஜெயராஜ் உள்ளிட்ட 75 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT