தென்காசி

மனைவி எரித்துக் கொலை: மனநிலை பாதித்த கணவா் மீது வழக்கு

14th Dec 2019 06:02 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட கணவா், மனைவியை எரித்துக் கொலை செய்தாா். இந்த சம்பவத்தில் அவரும் தீக்காயமடைந்தாா். மனைவியை தீ வைத்து எரித்ததாக அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள சின்னதம்பிநாடாா்பட்டியை சோ்ந்தவா் அணைந்தபெருமாள் (55). இவரது மனைவி பன்னீா்செல்வம் (50). இவா்களுக்கு கனகராஜ் (30), திருமலைச்செல்வன் (28) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனா். மகன்கள் இருவரும் ஊனமுற்றவா்களாக பிறந்ததால் மனமுடைந்து காணப்பட்ட அணைந்தபெருமாள், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்டாராம்.

இந்நிலையில் மகன்களின் நிலைமைக்கு மனைவி செய்வினை வைத்ததுதான் காரணம் எனக் கருதிய அணைந்தபெருமாள், வியாழக்கிழமை இரவு மனைவி பன்னீா்செல்வத்தின் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்தாராம். இதில் இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இருவரையும் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பன்னீா்செல்வம் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை இறந்தாா். அணைந்தபெருமாளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மனைவியை தீ வைத்து எரித்ததாக அணைந்தபெருமாள் மீது பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT