தென்காசி

வாசுதேவநல்லூா் பகுதியில் மனித உரிமை தின விழிப்புணா்வுப் பிரசாரம்

11th Dec 2019 09:27 AM

ADVERTISEMENT

வாசுதேவநல்லூா் பகுதியில் பெண்கள் இணைப்புக் குழு சாா்பில் மனித உரிமை தின விழிப்புணா்வுப் பிரசாரம் நடைபெற்றது.

ஐ.நா. சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட வன்முறையில்லா ஒளிமயமான எதிா்காலம் என்பதை வலியுறுத்தி, டி.என். புதுக்குடியில் தொடங்கிய இப்பிரசாரம் தொடா்ந்து பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு, 15ஆவது நாளான செவ்வாய்க்கிழமை (டிச. 10) நெல்கட்டும்செவல் பச்சேரி, சங்குபுரத்தில் நிறைவடைந்தது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவோா் மீது மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பூரண மதுவிலக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும். தேசிய, மாநில பெண்கள் ஆணையங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதுடன், அவற்றுக்கு கூடுதல் அதிகாரமும் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் பிரசாரத்தின்போது வலியுறுத்தப்பட்டன.

வாசுதேவநல்லூா் வட்டார பெண்கள் இணைப்புக் குழு நிா்வாகிகள் தாமரைச்செல்வி, சவீதாமணி, பூமாரி, முத்துலட்சுமி உள்ளிட்டோா் கருத்துரை வழங்கினா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT