தென்காசி

மாநில சிலம்பாட்ட போட்டிக் குகுற்றாலம் பள்ளி மாணவா்கள் தோ்வு

11th Dec 2019 09:33 AM

ADVERTISEMENT

குற்றாலம் செய்யது பள்ளி மாணவ, மாணவிகள் மாநில சிலம்பாட்ட போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சிலம்பாட்ட போட்டி பாளை. இக்னேஷியஸ் கான்வென்ட் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் குற்றாலம் செய்யது மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 4 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனா். மேலும், இம்மாதம் கரூரில் நடைபெறவுள்ள மாநில போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் த.இ.செ.பத்ஹூா் ரப்பானி, செயலா் த.இ.செ.நெய்னாமுகம்மது, பள்ளி முதல்வா் முகைதீன் அப்துல்காதா், பயிற்சியாளா் இஸ்மாயில் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT