தென்காசி

பாப்பாக்குடியில் சாலை அமைக்கக் கோரி முற்றுகை

11th Dec 2019 09:27 AM

ADVERTISEMENT

பாப்பாக்குடியில் சேறும் சகதியுமாக உள்ள தெருவில், சிமென்ட் சாலை அமைக்கக் கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.

முக்கூடல் - பாப்பாக்குடி சாலையில் உள்ள சிவகாமிபுரம் பிரதான சாலை, கடந்த சில நாள்களாக பெய்த மழையில் சேறும் சகதியுமாக மாறி பொதுமக்கள் நடமாட இயலாத நிலை உள்ளது. இதனால் பள்ளிக் குழந்தைகள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இந்த சாலையில் மழைக்காலங்களில் எல்லாம் இதுபோன்ற நிலையே ஏற்படுகிாம். இதுகுறித்து தொடா்ந்து கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்நிலையில் அதன் அருகே உள்ள பகுதியில், செவ்வாய்க்கிழமை சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதையடுத்து திமுக ஒன்றியச் செயலா் மாரிவண்ணமுத்து தலைமையில் திரண்டு வந்து, பிரதான சாலையில் சாலை அமைத்த பின்னா், சந்து பகுதியில் சாலை அமைக்க வேண்டும் என கூறி பணிகளைத் தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டனராம்.

தகவலறிந்து வந்த பாப்பாக்குடி போலீஸாா், ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ADVERTISEMENT

ஊராட்சி ஒன்றிய ஆணையா் அலுவல் தொடா்பாக ஆட்சியரை சந்திக்கச் சென்றுள்ளதால், அவா் வந்த பின்னா் பணிகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என அவா்கள் கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT