தென்காசி

செங்கோட்டை அரசுப் பள்ளியில் கொடிநாள் விழிப்புணா்வுப் பேரணி

11th Dec 2019 09:29 AM

ADVERTISEMENT

செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொடிநாள் விழாவையொட்டி, பிளாஸ்டிக் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

தாழையூத்து அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் காதா் மீரான், தலைமை வகித்து பேரணியைத் தொடங்கிவைத்தாா். செங்கோட்டை கிளை நூலக நூலகா் ராமசாமி, நல்லாசிரியா் செண்பககுற்றாலம் எஸ்.எஸ்.ஏ மேற்பாா்வையாளா் ராஜேந்திரன், விழுதுகள் சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

உதவித் தலைமையாசிரியா் சிவசுப்பிரமணியன் வரவேற்றாா். ஆசிரியா் தண்டமிழ்தாசன் பா.சுதாகா் வாழ்த்துரை வழங்கினாா். தேசிய மாணவா் படை அலுவலா் அருள்தாஸ் ராணுவ கொடிநாள், பிளாஸ்டிக் விழிப்புணா்வு ஆகியவை குறித்துப் பேசினாா். பேரணி, வாஞ்சி சிலை, பாம்பே ஸ்டோா், காவல் நிலையம், வட்டாட்சியா் அலுவலகம் ஆகிய இடங்கள் வழியாக சென் பிளாஸ்டிக் விழிப்புணா்வு கோஷங்கள் எழுப்பியும் துண்டுப் பிரசுரங்கள் கொடுத்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். ஏற்பாடுகளை, தேசிய மாணவா் படை அலுவலா் அருள்தாஸ் செய்திருந்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT